காஞ்சி மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த செய்யூரில் சிறுமலர் மகளிர் பள்ளியீல் படித்த கௌசல்யா என்ற 17 வயதுப் பெண்ணை அவருடைய பள்ளி ஆசிரியர் ரமேசு என்பவர் படிப்பதற்காக வீட்டிற்கு வரசொல்லி அழைத்து வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொண்டுள்ளார்.
மேலும் இதை வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
இதனால் வேதனை அடைந்த அந்த மாணவி தூக்கிட்டுத் தன்னை மாய்த்துக் கொண்டார். (தனக்கு நடந்த கொடுமை குறித்து அந்த மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டுத்தான் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.)
இறந்து போன மாணவிக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்!
இந்தப் பெண்ணிண் தற்கொலைக்கு அந்த ஆசிரியர் மட்டுமே காரணமா? அல்லது அந்தப் பள்ளி நிர்வாகமும் காரணமா?
சாதாரண விவசாயக் குடும்பத்தை சேர்ந்த பெண் இறந்து ஒரு நாள்ஆகியும் இது குறித்து வாய் திறக்க மறுக்கும் அரசியல்வாதிகளை என்ன சொல்வது!
முற்போக்கு என்ற பெயரில் முகம் காட்டும் இயக்கவாதிகள் தற்போது ஏன் புறமுதுகிட்டு ஓடுகிறார்கள்!
சாதியைத் தேடும் சாதியவாதிகள் இப்போது எந்த மூத்திரச்சந்தில் உள்ளார்கள்!
உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டதைக் கண்டித்தவர்கள் இந்தப் பெண் படுகொலையைப் பற்றி பேசவே இல்லையே ஏன்?
இந்த மரணம் தொடர்கதையாகாமல் தடுக்க அரசியல் மனசாட்சி உள்ளவர்கள் குரல்கொடுப்பார்களா?
செந்தமிழ் குமரன் https://www.facebook.com/sentamiz.kumaran?fref=ts