vaikopmeet_1458987349
பாலிமர் தொலைக்காட்சி நேர்காணலில் அதிமுகவின் ‘பி’ டீமுக்கு தலைமை என்றும், 1500 பேரம் பேசி பெற்றது மக்கள் நலக்கூட்டணி என்றும் பாலிமர் தொலைக்காட்சி நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, பதில் கூறாமல் எழுந்து சென்றார்.
இது அரசியலில் மிகவும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வைகோ திருச்சியில் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, ’’பாலிமர் கண்ணன் எனக்கு சிறந்த நண்பர். அவர் பேட்டி ஆரம்பிக்கும் முன்னரே, கேப்டன் அப்படி தகுதியான தலைவர் இல்லை.
அவருடன் கூட்டு சேர்ந்திருப்பதால், உங்களை எல்லாரும் ஏசுறான். உங்களுக்கு ஓட்டு கிடைத்தாலும் உங்கள் அணிக்கு எவனும் ஓட்டு போட மாட்டான் என்றார்.
ஒரு பெண்ணை பார்த்து நீ கற்புள்ளவளா? என்பதை போன்ற கேள்வி, என்னை பார்த்து, 1,500 கோடி ரூபாய் பணம் வாங்கி கொண்டேன் என்ற கேள்வி.
ஒரு பெண்ணை பார்த்து அப்படி கேட்கும் போதே, அவளின் கற்பை சந்தேகத்திற்கு உரியதாக்கிவிடுகிறது. அதுபோல, இந்த கேள்விக்கு நான் பதிலளித்து இருந்தால், கேள்விதான் பிரதானமாக இருக்கும். என்னுடைய பதில் பொதுமக்களிடம் எடுபட்டிருக்காது.
திமுகவை கைப்பற்ற துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனம் தான் (ஸ்டாலின் வகையறா) என்னை பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது.
கண்ணனின் கேள்விக்கு, ‘கார்ப்பரேட்டுகளிடம் இருந்து நீங்கள் மாதந்தோறும் 5 லட்ச ரூபாய் வாங்குகிறீர்கள்’ என்று எனக்கு வரும் தகவல் உண்மையா? என்று கேட்டிருந்தால் அவர் என்ன செய்திருப்பார்.
நான் அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை. அவரை மதிக்கும் விதமாக பேட்டியில் இருந்து விலகுவதாக மரியாதையாக கூறி விலகினேன். நாங்கள் கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள்’’ என்று கூறினார்.