
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏ பாலபாரதி. இவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ’’சட்டமன்ற உறுப்பினர் பதவியை இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து வகிப்போர் விடுவிக்கப்பட வேண்டும் என்பது மாநிலக் குழு முடிவு. அந்த அடிப்படையில் எம்.எல்.ஏக்கள் பாலபாரதி, டெல்லிபாபு (அரூர்) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய மக்கள் பணி தொடரும். மாநில செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது கட்சி முடிவு. அதன்படி நான் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel