
லாகூர்:
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 86 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தூதகரகங்கள் மூலமாகவும் முயற்சிகள் நடந்தது வந்தது.
இந்நிலையில் அரசு நல்லெண்ண அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 86 இந்திய மீனவர்களை விடுதலை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. இவர்கள் விரைவில் நாடு திரும்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel