s
திமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்தார்கள் என்று திமுகவினர் குற்றம் சாட்டினார்கள். திமுக ஆட்சிக்கு வந்தபின், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சொல்லி அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
ஆனால், அதே நபர்கள் திமுகவில் சேர்ந்தபிறகோ அல்லது திமுகவிற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கவோ முற்பட்டால், நீதிமன்றத்தின் முன்பு போதிய ஆதாரங்களை திமுக அரசு தராமல், அந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய ஏற்பாடு செய்கிறது. சட்டமும், நீதியும் சீர்குலைக்கப்படுவது மட்டுமல்ல, ஆளுங்கட்சியின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப வளைக்கப்படுகிறது.
கலைஞர் தலைமையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு சதாரண மக்கள் நிம்மதியாக நடமாடவே முடிவதில்லை என்ற நிலையும், குற்றம் புரிந்தவர்கள் வாழ்க்கையில் நிம்மதியோடு உலவுகிறார்கள் என்பதையும் பார்க்கும்போது, கொடுங்கோலர்கள் வாழும் நாட்டை விட, கடும்புலி வாழும் காடு எவ்வளவோ மேல் என்ற சீன அறிஞரின் கருத்துதான் நினைவுக்கு வருகிறது.
அதிமுக ஆட்சியில் காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது என்று கலைஞர் சொன்னார். இன்று ஈரலே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. சட்டத்துக்கு கட்டுப்படவேண்டிய காவல்துறையை ஆளுங்கட்சியை சேர்ந்த சமூகவிரோதிகள் தஙக்ள் கைப்பாவையாக மாற்றி விட்டனர்.

( 27.8.2009 அன்றைய  விஜயகாந்த் அறிக்கை.)