2004 மே மாதம் வைகோ பேசியது: “தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். பொடா சிறையில் நான் இருந்தபோது… தீபாவளிக்கு மறுநாள்… சிறையில் சந்தித்தார் கலைஞர். ஆறுதல் கூறினார். இருவரும் கண் கலங்கினோம். அதை அடுத்து என்னை சந்தித்த போது தம்பி உடல் ஆரோக்கியம் தான் முக்கியம். ஜாமீனில் வா என அழைத்தார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜாமீனில் வரக்கூடாது என்று தான் இருந்தேன். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தது. தேர்தல் பணியாற்றிட வேண்டிய நிலையில் கலைஞரின் அழைப்பை ஏற்று ஜாமீன் மனு செய்தேன். நிபந்தனை ஜாமீன் என கோர்ட் உத்தரவிட்டது. அப்போது நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது கலைஞர் அடுத்த அறையில் காத்திருப்பதை அறிந்து பதறி அடித்து ஓடி சென்று பார்த்தேன். இந்த இடத்திற்கு ஏன் வந்தீர்கள்? என கேட்டேன். பொடாவில் என்னையும் என்னுடன் 8 பேரையும் கைது செய்தது தவறு என்று முதல் கையெழுத்து போட்டவர் அண்ணன் கலைஞர். சென்ற ஆண்டு சித்திரை மாதம் ஜெயிலில் இருந்தேன். இந்த சித்திரையில் அண்ணன் கலைஞருடன் இருப்பதை நினைத்து மகிழ்கிறேன்!” |