00
ங்களது கூட்டணிக்கு வராத தே.மு.தி.கவில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் தி.மு.க. இறங்கிவிட்டது.  தேமுதிக திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கனகராஜ், ஆவடி நகர துணை செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில்  பெரும் தோல்வியைச் சந்தித்த தி.மு.க., வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறது.
“யார் வேண்டுமானாலும், கூட்டணிக்கு வரலாம்” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளிப்படையாக அறிவித்தார். அதோடு, தே.மு.தி.கவை தங்கள் கூட்டணிக்குள் இழுத்துவிட துடித்தார். ஆகவே பலமுறை தே.மு.தி.கவுக்கு அழைப்பு விடுத்தார்.
இவர் அழைப்புவிடும் அதே நேரம்,  தே.மு.தி.கவின் தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் தி.மு.க.வை கடுமையாக தாக்கிப்பேசிவந்தனர். அந்த நிலையிலும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல், தொடர்ந்து அழைப்புவிடுத்தபடியே இருந்தார் கருணாநிதி.

மேகதாது அணை விவகாரத்துக்காக கடந்த வருடம் (2015) ஏப்ரல் மாதம் கருணாநிதியை விஜயகாந்த் சந்தித்த போது...
மேகதாது அணை விவகாரத்துக்காக கடந்த வருடம் (2015) ஏப்ரல் மாதம் கருணாநிதியை விஜயகாந்த் சந்தித்த போது…

தங்கள் கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும்  என்பதை “பழம் நழுவி பாலில் விழும்” என்று குறிப்பிட்டார்.
ஆனால் மக்கள் நலக்கூட்டணியுடந் தொகுதி உடன்பாடு செய்துகொண்டது தே.மு.தி.க.
இதையடுத்து அக் கட்சி பிரபமுகர்களை இழுக்கும் வேலையை தி.மு.க. செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கெனவே, ம.தி.மு.க.வில் இருந்து பல நிர்வாகிகளை தி.மு.க. தங்கள் கட்சிக்கு இழுத்தது அறிந்ததே. அதே போல தற்போது தே.மு.திகவில் இருந்து இழுப்பு வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டது தி.மு.க.
இதன் முதல் கட்டமாக  தேமுதிக திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கனகராஜ், ஆவடி நகர துணை செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மேலும் பல நிர்வாகிகள்.. குறிப்பாக மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கட்சிக்கு வருவார்கள் என்று தி.மு.க. தரப்பில் பேசப்படுகிறது.
அதே நேரம், தே.மு.தி.க. தரப்பில் “பலவீனமான சிலரை, ஆசை காட்டி தி.மு.க. இழுக்கிறது. இவர்கள் ஒரு சிலரே. கட்சித்தொண்டர்களை தி.மு.க.வால் விலைகொடுத்து வாங்க முடியாது. ஆகவே சில நிர்வாகிகள் தி.மு.கவுக்குச் செல்வதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” என்று கூறப்படுகிறது.