09-1447067439-myanmar45

யாங்கூன்:

மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஆங்சாங் சூயி-ன் தேசிய லீக் கட்சி அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறது. மியான்மரில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சியே நடைபெற்று வருகிறது.

1990ஆம் ஆண்டு முதலாவது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் ஆங்சாங் சூயி கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தல் முடிவை ராணுவம் நிராகரித்தது. அதோடு, சூயி கைது செய்யப்பட்டு சிறையிலும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார்.   கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில் சூயி தேர்தலில் போட்டியிட தடையும் விதித்தது ராணுவ அரசு.

இதன் பிறகு உல நாடுகளின் நெருக்கடி காரணமாக மெல்ல மெல்ல மியான்மரில் ஜனநாயகம் திரும்பத் தொடங்கியது. நேற்று முன்தினம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலும் நடைபெற்றது.

09-1447067428-myanmar1576
மியான்மர் நாடாளுமன்றத்தில் 440 இடங்களை கொண்ட கீழ்சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல்சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. எஞ்சிய 25% இடங்கள் ராணுவத்தினருக்குரியது. அதை ராணுவத்தினரே நியமித்துக் கொள்வர்.

இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் நேற்று முன்தினம் மாலை முதல் நடந்தது. ஆரம்பத்தில் இருந்தே சூயியின் தேசிய லீக் கட்சி தொடர்ந்து அதிக இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகித்து வந்தது.

தற்போதைய செய்தியின்படி ஆகப்பெரும்பான்மையான இடங்களில் சூயியின் கட்சி வெற்றி பெறும் தருவாயில் இருக்கிறது. ஆகவே அவர் நாட்டின் தலைவராக பதவி ஏற்பது உறுதியாகி இருக்கிறது.

Aung Sang

 

நீண்ட காலமாக ராணுவ ஆட்சியாளர்களின் பிடியல் இந்த மியான்மர் மக்கள் தற்போதுதான் சுந்திரமாக மூச்சுவிடுகிறார்கள். இதையடுத்து அவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இந்தியாவில் தீபாவளி இன்று கொண்டாடப்படுவதுபோல, மியான்மர் மக்கள் தங்கள் சுதந்திரதினமாக இன்று கொண்டாடுகிறார்கள்.