சென்னை

ராமரிப்பு பணிகள் காரணமாக தெற்கு ரயில்வே தனது எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில்  மாற்றம் செய்துள்ளது.

இன்று  தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்.

”கர்நாடக மாநிலம் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வருகிற செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெங்களூரு கண்டோன்மென்டில் நிற்காது.  அதாவது பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் லால்பாக், டபுள் டக்கர், மெயில் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் (வண்டி-எண்-12608, 22626, 12658) செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரெ=யில் நிலையத்தில் நிற்காது.

அதே தேதிகளில், சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர், பிருந்தாவன், லால்பாக், சதாப்தி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களும் (22625, 12639, 12607, 12027) பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது.கன்னியாகுமரி-பெங்களூரு, தூத்துக்குடி-மைசூரு, சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16525, 16235, 12657) செப்டம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 19-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது.

அதே போல, பெங்களூரு-கன்னியாகுமரி, மைசூரு-தூத்துக்குடி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16526, 16236) செப்டம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது.மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16022), சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16021) செப்டம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 19-ந்தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது.”

என்று கூறப்பட்டுள்ளது.