கொல்கத்தா

யணிகளின் தேவைகளை  ரயில்வே துறை கருத்தில் கொள்வதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இன்று காலை  அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது.  எக்ஸ்பிரஸ் ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. மேலும் 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததுதான் இந்த கோர விபத்திற்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  விபத்தின் பலி எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ரயில் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய ரயில்வே துறை பயணிகளின் தேவைகளை கவனத்தில் கொள்வதில்லை எனவும், ரயில்வே துறை அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்களை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை எனவும், அதனால் தான் பெரும் பாதிப்புகளை ரயில்வே துறை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.