புகைப்பழக்கத்தினால் ஏற்படும் கேடு குறித்து, தனது முகநூல் பக்கத்தில் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியுள்ளார். அந்த பதிவு:
“சமீபத்தில் இரண்டு மரணங்கள். ஒருவர் உங்களுக்குத் தெரிந்த எழுத்தாளர் ம.வே.சிவகுமார். இன்னொருவர் உங்களுக்குத் தெரியாத என் உதவியாளர் ஒருவரின் தந்தை. இரண்டு பேரும் தீவிரமான புகை பிடிப்பாளர்கள். மரணத்திற்குக் காரணம் நுரையீரல் பாதிப்பு.
மது எதிர்ப்பு பிரச்சாரம் போல இல்லாமல் சிகரெட்டுக்கு எதிரான பிரச்சாரத்தின் தீவிரம் சற்றே குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு முறை புகை பிடிக்கும்போதும் உன்னையே நீ விரும்பவில்லை என்று பதிவு செய்கிறாய் என்றும்..அது சின்ன அளவிலான தற்கொலை என்றும்..சிகரெட்டின் ஒரு முனையில் நெருப்பு, மறுமுனையில் ஒரு முட்டாள் என்றும்..பல விதமாக பலர் சொல்லிவிட்டார்கள். நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சி என்று சினிமாவுக்கு முன்பாக அரசாங்கம் விளம்பரம் செய்வதும்.. வருடா வருடம் பட்ஜெட்டில் உற்பத்தி வரியை உயர்த்தி விலையை எக்கச்சக்கமாக உயர்த்துவதும் பெரிய விளைவுகலை ஏற்படுத்துகிறதா என்றே புரியவில்லை.
நான் செஞ்சிட்டேன். நீங்க?”
பட்டுக்கோட்டை பிரபாகருக்கு பதில் சொல்லுங்கள், நண்பர்களே..!