டொனால் டிரம்ப்
டொனால் டிரம்ப்

வாஷிங்டன்
படிப்பை முடித்த பிறகும் அமெரிக்காவிலேயே தங்கி பணிபுரியும் இந்திய மாணவர்களுக்கு  தமது ஆதரவு உண்டு என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் நாடு முழுவதும் தீவிர ஆதரவு திரட்டிவருகிறார்.
இவர் தன்னுடைய பிரசாரத்தின் துவக்கத்தில்  இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாடுகளில் இருந்துவந்து  இங்கு  சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களை அடித்து விரட்டுவேன் எனவும், .அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்து சென்றுவிடுகிறார்கள் எனவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
இச்சூழலில்  டோனால்டு திடீர் பல்டி அடித்துள்ளார். அதாவது  அமெரிக்காவில் படிப்பை முடித்து விட்டு படிப்புக்கு பின்னரும் இங்கேயே தங்கி பணிபுரியும் மாணவர்களுக்கு தான் முழு  ஆதரவுடன் உதவி செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான போக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு  அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் விரும்புகிறோமோ, இல்லையோ,,? அவர்கள் பணம் தருவதால் நாம் நிறையப் பேருக்கு கல்வியை கற்றுக் கொடுக்கிறோம். அறிவாளிகளான அவர்கள் நமது நாட்டுக்கு தேவைப்படுகிறார்கள்.
இந்தியாவில் இருந்து நமது நாட்டுக்கு வருபவர்கள் ஹார்வார்ட் போன்ற பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம்பெற்று தங்களது நாட்டுக்கு திரும்பி செல்கின்றனர். அங்கே சொந்தமாக நிறுவனங்களை தொடங்கி, நிறையபேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்து தங்களது எதிர்காலத்தை அமைத்து கொள்கின்றனர்.
இவர்களில் பலர் அமெரிக்காவிலேயே தங்கியிருந்து அதேபோன்றதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள விரும்புகின்றனர். ஆண்டுகணக்கில் நமது நாட்டிலுள்ள கல்லூரிகளில் படித்தவர்களை, தற்போது செய்வதுபோல், அவர்கள் பட்டம்பெற்ற நாளில் நமது நாட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது. அமெரிக்காவில் 11 லட்சம் பேர் முறையான விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். எனவே அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகள் மறுபரிசீலனை செய்யப்படும். ’ என தெரிவித்துள்ளார்.