டெல்லி
நேற்று பிரதமர் மோடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி உள்ளார்.
நேற்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டதையொட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் சந்தித்து பேசினர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், மத்திய மந்திரியுமான குமாரசாமி உள்பட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நேற்று, பிரதமர் மோடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் பிரதமரின் வ இல்லத்தில் சந்தித்துள்ளார். சந்திப்பின்போது ஆந்திராவில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான நிதி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.