காத்மண்டு :
நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா (77), உடல் நலக்குறைவால் காலமானார்.
இவர் 1939ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி போத் பிரசாத் கொய்ராலாவுக்கும், குமினிதி கொய்ராலாவுக்கும் மகனாக பிறந்தார். எளிமையான வாழ்க்கை முறையை கடைபிடித்த இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
நேபாள காங்கிரஸ் கட்சியின் கொள்கையா
ல் கவரப்பட்ட இவர், 1954ம் ஆண்டு அரசியலில் குதித்தார். படிப்படியாக வளர்ச்சி அடைந்த இவர், 1979ம் ஆண்டில் கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினராகவும், 1996ம் ஆண்டில் பொதுச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். 1998ம் ஆண்டில் கட்சியின் துணைத் தலைவரான இவர், 2010ம் ஆண்டில் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
நேபாள பிரதமராக 2014ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி முதல் 2015ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி வரை பதவி வகித்தார். நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட போது, ஒருமித்த கருத்தை எஏற்படுத்த முடியாததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்.