உயர்திரு விஜயகாந்த் அவர்களுக்கு, வணக்கம்.
கடந்த இரண்டு மாதங்களாக அதிகம் உச்சரிக்கப்பட பெயர் உங்கள் பெயர். அரசியலில் உங்கள் பங்கு அப்படி. நன்றாக கவனியுங்கள் உங்கள் பங்கு என்றுதான் சொல்லியிருக்கிறேன். ஆளுமையல்ல. சினிமாவில் அடுத்தவர் வசனங்களை அப்படியே வாங்கி பேசியதால் என்னவோ உங்களால் எந்த முடிவும் தீர்க்கமாக எடுக்க முடியவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் தனித்து நின்றுஇருந்தால் கண்டிப்பாக தொங்கு சட்டசபையே வந்திருக்கும். ஆனால் சில ஊடக வியபாரிகளும் உங்கள் கிச்சன் கேபினட்டும் உங்களை குழப்பி உங்கள் 8% வாங்கு வங்கியை 6% குறைத்து ஜெயாமுன் மண்டியிட வைத்தது.
அடுத்த நாடளுமன்றத்திலும் உங்கள் கிச்சன் கேபினட் உங்களை தவறாகவே வழிநடத்திது. உங்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல்… மோடிஜியை ஒருமுறை கட்டித்தழுவியது மட்டுமே. உங்கள் ஓட்டுக்களை இன்று வரை பிஜேபி தன்னுடையாதாக காட்டிவருகிறது.
வள்ளுவன் வினைவலிமை தன்வலிமை என்று சொல்லுவான். அரசியலில் இன்னொன்று இருக்கிறது… களவலிமை. ராஜீவ்காந்தி இறந்த அலையிலும் சரி, ஜெயா ஊழலில் உச்சத்தில் இருந்த போதும் சரி, அதே கருணா/ஜெயா நாடளுமன்றத்தில் ஒன்றுமேயில்லாமல் தோற்றபோதும் சரி.. அவர்கள் வாக்கு வங்கி குறையவே இல்லை. இதுதான் அரசியல் உண்மை.
உங்களிடம் இப்போது இருப்பது 4% வாக்கு வங்கி. என்ன தான் பிரமேலதா பேப்பரை பார்த்து மூஞ்சியை சுழித்து தில்லுமுல்லு கழகங்கள் என் பேசினாலும்.. அதிமுக/திமுக உங்களை விட 9 மடங்கு பெரிய வாக்கு வங்கி உள்ள கழகங்கள்.
காசுக்கு சொரியும் ஊடகங்கள் சொல்கிறது, முகநூலில் வெளிநாட்டில் வாழ்வோர் சொல்லுவார்கள்.. கழக ஆட்சி தமிழ்நாட்டை சீரழித்தது என்று.. ஆனால் ஓட்டப்போடும் மக்கள் இன்னும் அப்படி சொல்லவில்லை. ஒருவேளை அப்படி சொல்பவர்கள் வெறும் சொற்பமே. இல்லையென்றால் வாக்குப்பதிவு நாளை விடுமுறைநாளாக கொண்டாடுபவர்கள் மட்டுமே.
இரண்டு கழகங்களும் செய்த பல நல்லவைகளை பிஜேபி காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மாநிலங்கள் கூட செய்யவில்லை என்பதை தெரிந்துகொள்ள…ஒரு விரிவான வாசித்தல் அறிவு இருந்தால்… உங்களால் புரிந்துகொள்ள முடியும். சரி விடுங்கள்.
ஊழலை எதிர்த்து நடைபயணம் செய்து.. அந்த பயணத்தை ஜெயலலிதா வீட்டில் முடித்தாரே ஒருவர்.. அவர் தான் இதுவரை தமிழ்நாட்டில் தனியொரு தலைவனாக இருந்துவந்தார்… ஒன்று ஒப்பாரி அரசியல் செய்வார்.. இல்லை… புரோக்கர் அரசியல் செய்வார்..!
காலம் உங்களை ஸ்டாலினுக்கு நிகராக வந்து நிறுத்துமென நினைத்தேன்.. ஆனால் பிரேமலதா உங்களை வைகோவிற்கு நிகராக கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.
நன்றி விஜயகாந்த அவர்களே… காலத்தை தவறவிட்டவர்களை காலம் மன்னிப்பதே இல்லை. மே இறுதியில் இதை உணர்வீர்கள்.
Saravana Kanth (முகநூல் பதிவு)