a
விஜயகாந்த் கட்சிக்கு தற்பொதைய வாக்கு வங்கி 3 முதல் 5 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் அவர் ஒரு கிங் ஆக மட்டுமல்ல ஒரு கிங் மேக்கராகக் கூட இருக்க முடியாது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர் புதிதாக கட்சியை துவக்கியபோது ஒரு ஹீரோ இமேஜ் அவருக்கு இருந்ததாகவும் எனவே அவருக்கு வாக்கு வங்கி 8 % அளவுக்கு உருவாகியிருந்தது என்றும் ஆனால் அதற்போது அவருக்கு ஒரு காமெடியன் இமேஜ் உருவாக்கி அதுவே தற்போது மேலோங்கியிருப்பதால் துவக்கத்தில் இருந்த வாக்கு வங்கி கிடு கிடுவென வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. விஜயகாந்த் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்சிக்கு அல்லது அணிக்கு பலன் ஏதாவது கிடைக்கிறதோ இல்லையோ, தலைவலிகள் எக்கச்சக்கமாக இருக்கும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எடுத்துக் காட்டாக மக்கள் நலக் கூட்டணியில் அவர் சேருவாரேயானால் அவர் உருவாக்கும் தலைவலிகளால் அந்த கூட்டணியின் ஒற்றுமை குலைந்து அந்த கூட்டணியே கூட உடைந்து போகும் வாய்ப்பு உண்டு என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது. ம. ந. கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்க விரும்புவது தவறல்ல. ஆனால்  இந்த நபரை சேர்த்தால் அதனால் நன்மையை விட தீமையே அதிகம் !
Tp Jayaraman (முகநூல் பதிவு)