மூத்த பத்திரிகையாளர திருஞானம் (Thirugnanam Mylapore Perumal ) அவர்களின் முகநூல் பதிவு:
“கருணாநிதி மீதும் ஜெயலலிதா மீதும் உள்ள கோபத்தில் மாவீரனாக வாழ்ந்து அமெரிக்கசூழ்ச்சியால் வீழ்ந்த சதாம் உசைனை கிரிமினல் என்பதாக பழிக்கிறார் பிரேமலதா. இது தவறல்லவா ?
O
ஈராக் அதிபர் சதாம் உசேன் – இந்தியாவின் நண்பர் ! உயர்ந்த கொள்கைவாதி ! அமெரிக்க அரசு
பொய்யான குற்றம் சாட்டி, ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்த பிறகு, அன்றைய பிரதமர் வாஜ்பாய்யிடம் – அணிசேரா நாடு [ NAM ] தத்துவ விளக்க சர்வதேச மையத்தின் – நிறுவனர் – தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தி எடுத்துச் சொன்னார் !
[இந்த INTERNATIONAL INSTITUTE OF NON-ALLIED STUDIES அமைப்பு, இந்திராகாந்தியின் ஆலோசனைப்படி, வாழப்பாடியாரல் உருவாக்கப்பட்டது ]
பிரதமர் வாஜ்பாய் அனுமதி பெற்று, ஏராளமான உயிர்காக்கும் மருந்துகளுடன் 40 LEYLAND பேருந்துகளை இந்தியா – ஈராக்குக்கு ரகசியமாக அனுப்பியது !
இதன் பொருட்டு நன்றி சொல்ல, இந்தியப் பிரதமரையும் – வாழப்பாடியாரையும்
ஈராக் அதிபர் அழைத்தார் !
ஆனால், மத்திய பெட்ரோலியம் அமைச்சரான வாழப்பாடியார் மட்டும் ஈராக் சென்றார் !
பாக்தாத் விமான நிலையத்தில், பலத்த பாதுகாப்புடன் – வாழப்பாடியாருக்கு வரவேற்பு நடந்தது !
பூமிக்குக் கீழே – ரகசியமாக – NASAவின் வேவு கண்களில் சிக்காதபடி சதாம் உருவாக்கிய சுரங்க மாளிகையில் – மூன்று நாட்கள், சதாமின் விருந்தினராக தங்கினார், வாழப்பாடியார் !
வாழப்பாடியார் – சதாமை சந்தித்தார் !
அப்போது அந்த காட்சியைப் பார்த்து, ”எனது நண்பர் வாழப்பாடியார், சதாம் உசேனுடன் கை குலுக்கும் காட்சியப் பார்த்து, மெய் சிலிர்த்துப்போனேன் ” என்றார், கருணாநிதி !
ஏனென்றால், கடந்த 10 ஆண்டுகளில், சதாமை சந்தித்த ஒரே நபர், எனது நண்பர் வாழப்பாடியார் !
அதுவரை, எந்த நாட்டுத் தலைவரும் தூதரும் அவரை நேரில் சந்தித்தது இல்லை !
சதாமின் அமைச்சர்கள் INTERCOM / TELE-CONFERENCE வழியாக மட்டுமே – சதாமிடம் ஆணை பெற்று ஆட்சி செய்தனர் !
அதாவது, சதாமின் அமைச்சர்களே, 10 ஆண்டுகளாக சதாமை நேரில் பார்க்கவில்லை !
”வாழப்பாடியார் – ரகசியம் காப்பார். அமெரிக்காவிடம் விலைபோகமாட்டார்..” என்று,
பாலஸ்தீன விடுதலை இயக்க [ PLO ] தலைவர் யாசர் அராபத் வழியாக அறிந்திருந்ததனால்,
சதாம் உசேன், தனது விருந்தினராக – மூன்று நாட்கள் வைத்திருந்தார் !
இந்த நிகழ்வு, உலகத் தமிழரிடையே வாழப்பாடியாரை மிகவும் நேசிப்பை உருவாக்கியது !
உலகில் எவருக்கும் கிடைக்காத மரியாதை இது !
O
ஒரு மாவீரனை கிரிமினல் என்று சித்தரித்த பிரேமலதா மன்னிப்பு கோரவேண்டும் !