நவக்ரஹம் நாடகம் முடிந்ததும் மொத்த பத்திரிகையாளர் கூட்டமும் கே.பி.யை பாராட்ட, கே.பி. இந்த நாடகம்வெற்றி பெற்றதற்கு இதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த மனோரமாவைச் சேரும் என்று சொல்லி மேக்-அப் ரூமில் இருந்த நடிகை மனோரமாவை அழைத்து ” பாராட்டுவதென்றால் இவரைப் பாராட்டுங்கள் ” என்று அழைத்துவந்து பாராட்டினார். தனக்கு கிடைத்த விருதுகளில் பெரிய விருது என்று கூறும் மனோரமா கே.பி. யின் பல படங்களில் நடித்தவர். உன்னால் முடியும் தம்பி படத்தில் அவருடைய அண்ணி பாத்திரம் மிக அற்புதமான பாத்திரப் படைப்பு. மனோரமாவும் பிரமாத படுத்தியிருப்பார்.
Patrikai.com official YouTube Channel
