
Arunaa Sunthararaasan அவர்களின் முகநூல் பதிவு:
“இரண்டு நாட்களுக்கு முன்பு பாரிசில் இருந்து என் தோழியின் சகோதரர் பேசினார். சீமானுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இருக்கிறதாமே…. ஆட்சியைப் பிடித்து விடுவாரா? என்று கேட்டார். அவர் பேசி முடித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஒரு தொகுதியில் கூட சீமானால் வெற்றி பெற முடியாது என்றேன். அப்படியா என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டவரிடம்…. ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்குகளைக்கூட அவர் கட்சியால் வாங்க முடியாது என்றேன்.
அடுத்து அவர் கூறியதுதான் என்னை அருவெறுக்கச் செய்தது.
பணம் மட்டும் இருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று ஒரு திட்டமிட்ட பொய்ப்பிரசாரத்தை சீமான் தரப்பு புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரப்பி பெரும் வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறது.
ஈழ உறவுகளே…. எச்சரிக்கை!
சீமானின் ஆவேச வார்த்தைகளை நம்பிவிடாதீர்கள்.
உங்கள் விடுதலை உங்கள் கையில் தான். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களால் தமிழீழ விடுதலையைப் பெற்றுத்தந்துவிட முடியாது. சீமான் போன்ற போலி தமிழ்த்தேசியம் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்!”
Patrikai.com official YouTube Channel