கொழும்புவில் வசிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் எஸ்.டி. நளினிராஜ் அவர்களின் அவசியமான முகநூல் பதிவு:
“நான் ஒரு கடைக்கு நப்கின் துவாய் வாங்க போயிருந்தேன் . நான் கையில் கொடுத்ததை பையன் ஒரு பிரவுன் பையில் சுத்தும் போது நான் சொன்னேன் ” தம்பி அப்படியே தாருங்கள் ஏன் பையில் போட்டு மறைகின்றீர்கள் என்று ” அதற்கு அவன் “இல்ல மிஸ் இப்படிதான் எல்லோரும் கேட்கின்றார்கள் “என்றான்.
மாத விடாயும் அதனால் ஏற்படும் அசவ்கரியங்கள் , அந்த நேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் , நாற்பது வயசை தாண்டும் போது ஏற்படும் மாற்றங்கள் , கூடிய உதிரப்போக்கு … என்பவை ஒவ்வொரு ஆணும் அறிய வேண்டிய முக்கியமான விடயம் . காரணம் ஒவ்வொரு ஆணும் தாயான சகோதரியான , தங்கையான துணைவியான அல்லது தன மகள் மருமகள் என்று பெண்ணுடன்தான் வாழ்கின்றான்.
மாதவிடாய் , பொது வெளியில் கூச்சமின்றி பேச பட வேண்டிய கற்றுக்கொள்ள வேண்டிய விடயம்.”