இஸ்லாமாபாத்: நோபல் அமைதிப் பரிசுக்கு தான் தகுதியானவன் அல்ல என்றும், காஷ்மீர் பிரச்சினைக்கு யார் சமரசமான முறையில் தீர்வு காண்கிறாரோ, அவர்தான் உண்மையான தகுதிவாய்ந்தவர் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுதலை செய்து, இந்தியாவுடனான போர் பதற்றத்தை தணிக்கும் வகையில் செயல்பட்ட காரணத்திற்காக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யும் வகையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
அதுகுறித்து பேசிய இம்ரான்கான், “அந்தப் பரிசைப் பெற நான் தகுதியானவன் அல்ல. காஷ்மீர் பிரச்சினைக்கு, காஷ்மீர் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் யாரொருவர் தீர்வை அளிக்கிறாரோ, அவர்தான் அந்தப் பரிசைப் பெறுவதற்கு உண்மையான தகுதிவாய்ந்த நபர்” என்று தெரிவித்துள்ளார் இம்ரான் கான்.
– மதுரை மாயாண்டி