டில்லி
தற்போதைய நாடாளுமன்ற தொடரில் 76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் ‘ரத்து செய்தல் மற்றும் திருத்தம் செய்தல்’ மசோதா, தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. நேற்று மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதா நிறைவேற்றப்பட்டு இரு அவைகளின் ஒப்புதலையும் பெற்று விட்டது.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்,
”மோடியின் தலைமையிலான பாஜக அரசு பதவிக்கு வந்த பிறகு வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் 1,486 பழைய சட்டங்களை ரத்து செய்தது. ஆகவே தற்போது நீக்கப்படும் 76 பழைய சட்டங்களையும் சேர்த்து, மொத்தம் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன”
என்று தெரிவித்துள்ளார்.