
நடிகை கே.ஆர். விஜயாவின் கணவர் வேலாயுதம் (வயது 84), உடல் நலக்குறைவால் கோழிக்கோட்டில் இன்று காலமானார். வேலாயுதத்தின் இறுதிச்சடங்கு கோழிக்கோட்டில் நாளை நடைபெற உள்ளது.
தொழில் அதிபரான வேலாயுதம் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். 1968ல்
கே.ஆர்.விஜயாவை காதல் திருமணம் செய்து கொண்டார். கே.ஆர்.விஜயா – வேலாயுதம் தம்பதியினருக்கு ஹேமலதா என்ற மகள் உள்ளார்.
மறைந்த வேலாயுதத்துக்கு கே.ஆர்.விஜயா தவிர சாரதா, விலாசினி என்ற 2 மனைவிகளும் அவர்களுக்கு 7 குழந்தைகளும் உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel