khushboo
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று பேசப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் அளித்துள்ள பதில்:
’’தேர்தலில் போட்டியிடுவதற்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள குஷ்பு சுந்தர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மற்றவர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். மேலும் அவரை தேர்தல் பிரசாரத்தில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. எனவே குஷ்பு சுந்தர் போட்டியிட விரும்பினால் கட்சியின் தேர்தல் குழு அதுகுறித்து முடிவு செய்யும்.’’