டெல்லி

டெல்லி

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பதால் இது குறித்து அமைச்சர் கோபால் ராய் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்று மாசு அதிகரித்து இன்று காற்று தரக்குறியீடு 432 ஆக பதிவாகியுள்ளது.  டெல்லியில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் அடர்ந்த மூடுபனி நிலவி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் காற்று தரக்குறியீடு 473 என்ற கடுமையான பிரிவில் பதிவானது. ஏற்லமவே காற்று மாசுபாடு, பனி மூலம் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றுமாசுபாடு தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அமைச்சர் டெல்லி தலைமைச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டபோது காற்று மாசை கட்டுப்படுத்த நிலை 3 கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் 3 ஆம் நிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மின்சார வாகனங்கள் தவிர பிற மாநில பஸ்கள் டெல்லியில் நுழைய தடை விதிக்கப்படும். கட்டுமான இடிப்பு, சுரங்கப் பணிகளுக்கும் தடை விதிக்கப்படும். மேலும் 5ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளாக மாற்றுவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.