vv
சென்னை:
தேமுதிக கொறடாவாக இருந்த வி.சி.சந்திரகுமார், எம்எல்ஏக்கள் பார்த்திபன், சி.ஹெச்.  சேகர் மற்றும் ஏழு மாவட்டச் செயலாளர்கள் தேமுதிக தலைமைக்கு எதிராக நேற்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்கள்.  விஜயகாந்த்தையும், பிரேமலதா விஜயகாந்த்தையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர். அதோடு, திமுக கூட்டணியில் சேரக் கோரி கெடுவும் விதித்தனர். இதையடுத்து அத்தனை பேரையும் மொத்தமாக கட்சியை விட்டு நீக்கினார் விஜயகாந்த்.
இந்த நிலையில் இன்றும் அதிருப்தியாளர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டினர்.  பா.ஜ.கவில் எதிர்பார்த்தது கிடைக்காததாலேயே மக்கள் நலக்கூட்டணியுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்தது என்றும் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் தேமுதிக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களின் அவசரக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள அக் கட்சி தலைமையகத்தில் கூடியது.  இக் கூட்டத்தில்  சுதீஷ், பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன், பார்த்தசாரதி எம்.எல்.ஏ உள்ளிட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் சிக்கலான நேரத்தில் கூட்டப்படம் முக்கியமான இந்த கூட்டத்திலும் விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை என்று தகவல் பரவியிருக்கிறது.