
நீலகிரி
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 11 பேர் மரணம் அடைந்ததை ஒட்டி நீலகிரி சென்றுள்ள தமிழக ஆளுநர் சென்னை திரும்புகிறார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் தமிழக காவல்துறாஇயிஅர் துப்பாக்கி சூடு நிகழ்த்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்கு நாடெங்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் தமிழக அரசுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நீலகிரிக்கு சென்றுள்ளார். இந்த தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் தனது இரங்கலை மரணம் அடைந்தவர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உடனடியாக சென்னை திரும்ப உள்ளார்.
[youtube-feed feed=1]