பிடென் மற்றும் அவரது மகன் உடன் ஒபாமா
பிடென் மற்றும் அவரது மகன் உடன் ஒபாமா
வாஷிங்டன்:
‘‘எனது மகன் சிகிச்சைக்கு அதிபர் ஒபாமா தனது சொந்த பணத்தில் இருந்து நிதியுதவி செய்தார்’’ என துணை அதிபர் ஜோசப் ஆர். பிடன் தெரிவித்துள்ளார்.
ஒரு பேட்டியின் போது அமெரிக்கா துணை அதிபர் பிடன் கூறியதாவது:
எனது மூத்த மகன் பியூ, ஒரு முறை நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தார். அவனது குடும்ப வருமானத்தை கொண்டு சிகிச்சைக்கான செலவை எவ்வாறு சமாளிப்பார் என்று கவலை கொண்டிருந்தேன். அதிபர் ஒபாமாவுடன், தனிப்பட்ட முறையில் வாரத்தில் ஒரு முறை  மதிய உணவு சாப்பிடுவேன். எனது இந்த கவலையை அவரிடம் தெரிவித்தேன். அவரிடம் ‘‘எனது வீட்டை விற்பனை செய்துவிடலாம் என்று எனது மனைவி ஜில்லிடம் கூறினேன். ஆனால் எனது மனைவி ஒரு நாள் இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து என்னிடம் வீட்டை விற்க கூடாது என சத்தியம் வாங்கிவிட்டார்’’ என்றார்.
எனது இந்த நிதி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தவர் ஒபாமா. அவரே அந்த பணத்தை கொடுத்தார். அவரும் ‘‘நான் கொடுத்த பணம் குறித்து யாரிடமும் கூறக் கூடாது’’ என்று சத்தியம் வாங்கினார். ஆனால். துணை அதிபரின் மகன் கடந்த மே மாதம் தனது 46வது வயதில் மூளை புற்று நோயால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.