நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஸ்மிருதி இரானி ஆற்றிய ஆவேச உரை பல தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட ஐதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் குறித்து தவறான தகவலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார் என்று பல தரப்பினராலும் கண்டிக்கப்பட்டார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. ஆனால் அவரது பேச்சை சங் பரிவாரங்களும், பாரதிய ஜனதா கட்சியினரும் கொண்டாடுகிறார்கள்.
இப்படி நடக்க வேண்டும் என்றுதான் ஸ்மிருதி இரானி ஆசைப்பட்டார். அதற்குக் காரணம், வர இருக்கும் உத்திரபிரதேச மாநில சட்டசபை தேர்தல்!
இந்த தேர்தலில் யாரை பாஜகவின் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என்கிற போட்டி அக் கட்சிக்குள் நடந்துவந்தது.
அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உ.பியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் . பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைத்தது. ஆகவே வர இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார்கள் பாஜகவினர். ஆகவே உ.பி. முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கான போட்டி கட்சிக்குள் அதிகரித்து வந்தது.
ஸ்மிருதி இராணிக்கு, தானே முதல்வர் வேட்பாளர் ஆகவேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்கான தருணத்தை அவர் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார்.
அது கடந்த வாரம் கிடைத்தது. பாராளுமன்றத்தில் காவி அரசியலுக்கு ஆதரவாக பொங்கி தீர்த்தார். இதையடுத்தே காவி அமைப்பினரிடையே ஸ்மிருதி இராணிக்கு ஆதரவு பெருகியிருக்கிறதாம்.
ஆகவே வரும் உ.பி. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ஸ்மிருதி நிறுத்தப்படுவார் என்கின்றன டில்லி வட்டார தகவல்கள்.