டெல்லி

நாடெங்கும் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடந்து வருகிறது.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் பஹல்காமில் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இதையொட்டி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் முட்நிதது, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவிட்டது.  இதற்காக மத்திய உள்துறை தேர்வு செய்யப்பட்டு இருந்த அந்த 244 இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த

காஷ்மீர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையை தொடங்கி உள்ளனர். மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் இணைந்து ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தற்போது போர்க்கால ஒத்திகை தொடங்கி உள்ளது. கல்பாக்கத்தில் பல்துறை வீரர்கள், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஆகியோர் ஒத்திகைக்காக வருகை தந்துள்ளனர். போர்க்காலத்தில் அணுமின் நிலையம் தாக்கப்பட்டால் எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஒத்திகை நடபெ\ற்று வருகிறது.

[youtube-feed feed=1]