இரண்டு நாட்களுக்கு முன் ப்ரித்விராஜ் நடித்த சப்தமாசிரி தஸ்கரகா (sapthamasree thaskaraha) என்ற மலையாளப் படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. படத்தின் முடிவில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருக்கும் மருத்துவமனையின் லாக்கரிலிருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள் ப்ரித்விராஜ் அன் கோ. போலீசின் கவனத்தை திசை திருப்ப மருத்துவமனையின் செப்டிக் டேங்க்கை உடைத்து பின் அதை சுத்தம் செய்ய போவது போல திட்டம். இதுவரை எதுவும் இல்லை. அந்த கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இவர்கள் ஏற்பாடு செய்யும் மூவரும் தமிழில் பேசுகிறார்கள் அதாவது தமிழர்கள். இதுதான் என்னை உறுத்தியது.மற்ற பாத்திரங்கள் எல்லாம் மலையாளிகள். கேரளாவில் கழிவு நீக்கும் தொழிலை செய்வது தமிழர்கள் தானா?
- கே.சரவணன் https://www.facebook.com/saravanan.kathiresan.39?fref=ts
Patrikai.com official YouTube Channel
