சென்னை

தற்போது வெற்றி பெற்றுள்ள 37 எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் செயல்பாடு குறித்த விளக்கம்.

நேற்று நடந்த மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே வென்றுள்ளார். திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மொத்தம் 37 பேர் வென்றுள்ளனர். இவர்கள் வீன் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக ஏற்கனவே பாஜகவுக்கு முழு பெரும்பான்மை உள்ளதால் இவர்கள் கோரிக்கையை பாஜக ஏற்காது என பலரும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதே உண்மையாகும். தற்போதைய மக்களவை உறுப்பினர்கள் கட்சி ரீதியாக எதிர்க்கட்சியினர் என்னும் போதிலும் அனைவரும் படித்த விவரம் அறிந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் எதிர்க்கட்சிக்கும் எதிரிக்கட்சிக்கும் உள்ள வேறுபாட்டை அறிவார்கள்

உதாரணமாக திருமாவளவன் தனது பேச்சுத் திறமை, அரசியல் தலைமை ஆகிய குணங்களால் பலரையும் கவர்ந்தவர் ஆவார்.

அது மட்டுமின்றி இந்த 37 பேரில் பல எழுத்தாளர்கள் உள்ளனர்.

தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு சிறந்த கவிதாயினி ஆவார். இவர் 20 புத்தகங்கள் எழுதிய்வர் ஆவார். தனது எழுத்துப் பணியையும் மக்கள் பணியையும் ஒரு சேர தொடர உள்ளதாக இவர் தெரிவித்துள்ளார். இது அவருடைய நேர மேலாண்மையை காட்டுகிறது.

தமிழ் மார்க்சிய வழியில் புதினங்களை படைத்த சு வெங்கடேசன் தனது முதல் நாவலான காவல் கோட்டம் என்னும் புதினத்துக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். அவர் எழுதிய இரண்டாம் நாவலான வீரயுக நாயகன் வேல்பாரி  என்னும் நாவல் ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடராக வந்தது. சங்க காலத்தில் வாழ்ந்த பாரி மன்னன் குறித்த இந்த நாவல் இக்கால தலைமுறைக்கும் பொருத்தமானதாக இருந்தது.

ஜோதிமணி ஏற்கனவே தனது சிறுகதை தொகுப்பு மற்றும் நாவல் மூலம் புகழ் அடைந்தவர் ஆவார். இவர் ஒரு நகரசபை உறுப்பினராக தலித் மக்கள் வசிப்பிடத்துக்கு நீர் வசதி பெற்று தர போராடிய அனுபவங்களை ”நீர் பிறக்கும் முன்” என கட்டுரை தொகுப்பாக வெளியிட்டு புகழ் அடைந்துள்ளார். ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்யபட்ட இந்த நூலின் மூலம் அவர் தலைவராகும் முன்பு அனுபவித்த துயரங்கல் தெரிய வருகிறது.

விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினரான விசிக வின் ரவிகுமார் தனது இலக்கிய பணியையும் தொடர்ந்து வருகிறார். தேர்தல் முடிவு வருவதற்கு இரு தினங்கள் முன்பு அவர் எழுதிய இரு புத்தகங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்று தலித் புராணக்கதையான நந்தன் ஆகும். மற்றொரு புத்தகம் ரஜினிகாந்தின் அரசியலை பற்றியதாகும்.

கனிமொழி யின் இலக்கியப் பணிகள் பலரும் அறிந்ததாகும்.

இது போன்ற எழுத்தாள்ர்கள் சுதந்திரமான சிந்தனை கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. உதாரணத்துக்கு காங்கிரஸ் கட்சி மேல் சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு ஆத்ரவு தெரிவித்த போதும் ஜோதிமணி அதை எதிர்த்துள்ளார்.

திராவிட கொள்கையான கூட்டாட்சி என்பது தமிழ்நாட்டில் முக்கிய இனமாக உள்ளது. இது கடந்த ஐம்பது ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களின் முடிவில் கூட்டாட்சியின் அவசியம் நன்கு விளங்கி உள்ளது. கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் தமிழ் நாட்டில் மக்களவை தேர்தலில் மாநிலக் கட்சிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆயினும் மத்திய அரசில் 1989 வரை மாநிலக் கட்சிகள் இடம் பெறவில்லை.

இடையில் ஒரு முறை சரண்சிங் அமைச்சரவையில் சத்தியவாணி முத்து பங்கேற்றாலும் அது மிக சிறிய நாட்களிலேயே கவிழ்ந்தது. அதன் பிறகு ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுக, மற்றும் காங்கிரஸ் தலைமையிலான திமுக ஆகியவை மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தது கூட்டாட்சி தன்மைக்கு எடுத்துக் காட்டாகும். அப்போது பல முறை இரு கட்சிகளும் கூட்டணியில் இருந்த போதிலும் தமிழக மக்களுக்கு எதிரான பிரச்சினைகளின் போது அரசை எதிர்த்துள்ளனர்.

இன்றைய நிலையில் பாஜக ஆட்சி அமைக்க தமிழக மக்களவை உறுப்பினர் ஆதரவு தேவை இல்லை என்பது உண்மையாகும். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “அதிமுக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் இருந்தால் தமிழக தேவைகளை உடனடியாக மத்திய அரசிடம் இருந்து பெற்று தந்திருப்பார்கள்” என கூறி உள்ளார்.

ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் அவர் உதய், நீட், ஜிஎஸ்டி போன்றவற்றை தொடர்ந்து எதிர்த்து வந்தார். அவர் மத்திய ஆட்சியில் பங்கேற்கவில்லை. ஆயினும் அவர் உயிருடன் இருந்த வரை மத்திய அரசால் இந்த திட்டங்களை அமுல் படுத்த முடியாத நிலை இருந்தது. அவர் உடல்நிலை குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகே மத்திய அரசு ஒவ்வொரு திட்டமாக கொண்டு வந்தது.

எனவே குடியரசு நாட்டில் எதிர்க்கட்சிகள் என்பதால் குரல் எழுப்ப முடியாது என்பது சரியான வாதம் இல்லை. வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காதவர்களுக்கும் தாங்கள் அமைச்சர் தான் என்பதை மத்திய பாஜக உணர்ந்தால் இவர்களால் நிச்சயம் தங்கள் மாநில தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

 

Thanks : The News Minute