சென்னை
மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் 3 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 4462 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,70,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 10,423 பேர் உயிர் இழந்து 6,17,403 பேர் குணம் அடைந்து தற்போது 42,566 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,85,573 பேர் பாதிக்கப்பட்டு 3,452 பேர் உயிர் இழந்து 1,68,633 பேர் குணம் அடைந்து தற்போது 13,488 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 40,148 பேர் பாதிக்கப்பட்டு 612 பேர் உயிர் இழந்து 37,504 பேர் குணம் அடைந்து தற்போது 2,032 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 38,315 பேர் பாதிக்கப்பட்டு 507 பேர் உயிர் இழந்து 33,105 பேர் குணம் அடைந்து தற்போது 4703 பேர் சிகிச்சையில் உள்ளனர்.