
ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மக்கள் நல கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளது. இதற்கு அந்த கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் மீண்டும் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும், துணை தலைவர் ராகுல்காந்தியையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர்கள் அதிகாரபூர்வமாக தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. j
Patrikai.com official YouTube Channel