
“ஜல்லிகட்டை தடை செய்ய வேண்டும்.” என்று நடிகர் தனுஷ் கூறியதாக தகவல் வெளியானது. இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் தனுஷை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள்.
ஆளாளுக்கு கடுமையாக தனுஷை திட்டித் தீர்த்தார்கள். இன்னும் சிலர் வேறு மாதிரி தங்களது “எதிர்ப்பை” காட்டினார்கள்.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, இசை அமைப்பாளர் அனிருத்தை கட்டிப்பிடித்தபடி சிரிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “அனிருத்தை முதல்ல தடை பண்ணுங்க, தனுஷ்” என்று கமெண்ட் போட்டிருக்கிறார்கள்.
மேலும் பலர் எழுத முடியாத அளவுக்கு வசைபாடியிருக்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான், ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கலை.. ஆதரிக்கிறேன் என்று அறிக்கை விட்டாரோ தனுஷ்!?
ஆனால் இன்னமும் இது போன்ற படங்களை புதிது புதிதாக பதிவிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள் பல நெட்டிசன்கள்.
Patrikai.com official YouTube Channel