தனுசு ராசி
தனுசு ராசி

எளிமையாக பழகும் குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் அமர்ந்துகொண்டு அலைச்சலையும் அவமானங்களையும் கொடுத்த ராகுபகவான் இப்போது உங்களுக்கு 9-ம் வீட்டில் அமர்கிறார். ஆகவே இனி தடைகள் அகன்று காரியங்கள் அனைத்தும் சித்தியாகும். குழம்பிக்கிடந்த மனம் தெளிவடையும். பிறரை சார்ந்து நில்லாமல், சொந்தக்காலில் நிற்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
சிலர், வீடு கட்டும் வேலையை ஆரம்பிப்பார்கள். மங்கள நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் கலகலப்பு நிலவும். தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அவரது உடல் நலத்திலும் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டிய காலகட்டம் இது. பூர்வீக சொத்துக்கள் குறித்து பிரச்சினை ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வப் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று வழிபடுவீர்கள்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை உங்களுடைய புகழ், கௌரவம் உயரும். அரசாங்க ரீதியாக சில நன்பமைகளை பெறுவீர்கள். புதிய தொழில் அல்லது வேலை முயற்சிகள் வெற்றி பெறும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். 11.03.2016 முதல் 15.11.2016 வரை பழைய கடன்களால், பிரச்சினை ஏற்படும். சிந்தித்து செயல்பட்டு, கடன் பிரச்சினயில் இருந்து வெளியேறுங்கள்.
வழிபாடு: காஞ்சிபுரம் ஸ்ரீ மகா காளேஸ்வரரை வணங்குங்கள்.
 
கேதுவின் பலன்கள் :
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்து தாயாருக்கு உடல் உபாதைகளையும், அதனால் உங்களுக்கு செலவையும் தந்துகொண்டிருந்த கேதுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்கிறார். இதனால் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். தைரியமாகச் சில முடிவுகளை எடுப்பீர்கள். தன்னிச்சையாகச் செயல்பட்டு, காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். . புதிய பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் புது வீடு வாங்குவார்கள். . இளைய சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். 08.01.2016 முதல் 12.07.2016 வரை உங்களுடைய பலம் பலவீனத்தை அறிந்து காரியங்களில் இறங்குவீர்கள். கிடைக்காதோ என்று நீங்கள் கருதிய தொகை கைக்கு வந்து சேரும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை மனதில் சஞ்சலம், நிம்மதியின்மை, எதிலும் பிடிப்பற்ற போக்கு நிலவும். பக்தி மார்க்கத்தில் மனதைச் செலுத்துவது நல்லது..
21.03.2017 முதல் 25.07.2017 வரை மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். பூர்வீகச் சொத்து கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் மனதைப்புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வார்கள். நீங்கள் பொறுத்துப்போவது நல்லது. வீண் அலைச்சல்களை தவிர்க்க முடியாது. .
ஆனாலும் பொதுவாக பார்க்கும் போது, சிரமத்துக்கு இடையிலும் நினைத்ததை சாதிக்கும் காலமாக இந்த ராகு கேது மாற்றம் இருக்கும்.