இன்னிக்கு பாத்த ஒரு வீடியோ ரொம்பவே என்னை டென்ஷன் ஆக்கிடுச்சு.
அந்த பத்து வயசு பொண்ண நினொச்சாலே பகீருங்குது.
நெடுஞ்சாலையில பைக் ஒண்ணு வேகமா போகுது. அதை ஒட்டுறது அந்த பத்து வயசு பொண்ணுதான்!
பின் சீட்டுல ஒருத்தரு உக்காந்துகிட்டு அந்த குழந்தைய உற்சாகப்படுத்துறாரு. கொஞ்ச நேரத்துல… வண்டி ஸ்பீடா ஓட.. ரெண்டு கையையும் விட்டுட்டு, ரோட்டை கவனிக்காம சுவாரஸ்யமா பேச ஆரம்பிக்குது அந்த பொண்ணு!
பாக்கறப்பவே அடிவயத்த கலக்கிருச்சு.
சாதாரணமா வண்டி ஓட்டுறதுக்கே குறிப்பிட்ட வயசு ஆகியிருக்கணும்னு சொல்லுது சட்டம். இதுல குழந்தையை பைக் ஓட்ட விடுறதே தப்பு. தவிர கையைவிட்டு போற அளவுக்கு டிரெய்னிங் கொடுத்திருக்காங்க!
இது எவ்வளவு ஆபத்தான விசயம்?
நிச்சயமா அந்த குழந்தையோடு பெற்றோர்கள்தான் இப்படி பயிற்சி கொடுத்திருக்கணும். இல்லேன்னா அவங்க அனுமதியோட வேற யாராவது கொடுத்திருக்கணும். எப்படி இருந்தாலும் அந்த குழந்தையோட பெற்றோர்கள் குற்றவாளிங்கதான்!
“பிரபலமான குழந்தையோட பெற்றோர்”னு பேரு வாங்க ஆசைப்பட்டு இப்படி பண்றது நியாயமா?
இது மட்டுமில்ல.. டிவியில தங்களோட குழந்தை முகம் வரணும்னு ஆபாச பாட்ட சொல்லிக்கொடுத்து பாடவைக்கிறதும் இதே மாதிரி கொடுமைதான்!
பெத்தவங்களுக்கே புத்தி இல்லேன்னா மத்தவங்க சொல்லி என்ன ஆகப்போகுது?