அவ்வப்போது ஏதாவது பொய் சொல்லி சிக்கிக்கொள்வது பிரதமர் மோடியின் வாடிக்கை. இப்போது லேட்டஸ்ட்டாக ஒரு பொய்யைச் சொல்லியிருக்கிறார்.
“நான் சமூகவலைதளங்களில் இணைந்தபோது முதல்வராகவோ, பிரதமராகவோ வருவேன் என்று நினைக்கவே இல்லை” என்று சொல்லியிருக்கிறார். காமெடி என்னவென்றால், இவர் குஜராத் முதல்வராக ஆனபோது பேஸ்புக், டுவிட்டர் ஆகியவை கிடையவே கிடையாது.
குஜராத் முதல்வராக மோடி ஆனது, 2001ல். பேஸ்புக் மற்றும் ஜிமெயில் துவங்கப்பட்டது 2004ல்! ட்விட்டர் துவங்கப்பட்டது 2006ல்!
இந்தியாவை டிஜிட்டல் ஆக்கறது இருக்கட்டும், பேச்சை முதல்ல ஒரிஜினல் ஆக்குங்க மிஸ்டர் மோடி!
@ ரவுண்ட்ஸ்பாய்