traffic
ஜெர்மனி:
நான்கு வழிச்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது அரிது. ஆனால், அப்படி நெருக்கடி ஏற்பட்டுவிட்டால் அவ்வளவுதான், மணி கணக்கில் காத்து நிற்க வேண்டி வரும். இந்த நெருக்கடியில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை உள்ளிட்ட அவசர வாகனங்களும் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கும்.
இந்த வாகனங்களுக்கு வழி விட வேண்டும் என்று நினைத்தாலும், விட  முடியாத நிலை தான் இருக்கும். அனைத்து வாகனங்களுக்கு ஒன்றோடு ஒன்று நெருக்கிக் கொண்டும், இடைவேளியின்று அடுத்தடுத்து நிறுத்தப்படுவதால்,  விலக இடம் இருக்காது.
நான்கு வழிச்சாலையில் வரிசைக்கு நான்கு வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தை முற்றிலும் ஜாம் செய்துவிடுவார்கள். ஆனால் ஜெர்மனியில் அவசர வாகனங்களுக்காக சாலை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, அது வாகன ஓட்டுநர்களுக்கும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலையில் எந்த  வழியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுவிடடாலும், வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறத்தில் மட்டுமே ஒதுக்கி நிறுத்த வேண்டும். நடுவில் அவசர வாகன்கள் செல்ல இடம் ஒதுக்கி தர வேண்டும். இந்த விதியை அங்குள்ள ஓட்டுனர்கள் கடைபிடிக்கிறார்கள். இங்குள்ள படத்தை பார்த்தால் அந்த அற்புதமான காட்சி  தெரியும். நம்மூரிலும் இது போன்று வந்தால், அவசர வாகனங்களுக்கு உதவியாக இருக்கும்.