kirishna

“ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்ற பக்தி பாடலுக்கு மயங்காதவர் இருக்க முடியாது.  கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று ஏன் அழைக்கிறோம்?

கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் அந்த பகுதி மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். இதனால் வேதனை அடைந்த மக்கள், “எங்களுக்குவிமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா?” என்று தினமும் ஸ்ரீமந்நாராயணனை மனமுருக  வேண்டினார்கள்.

ஒருநாள் ஒரு மூதாட்டியின் வீட்டு கதவு தட்டப்பட.. தன்னை கொல்ல அசுரன்முரன் வந்துவிட்டானோ என்று பயந்து நடுங்கியபடி கதவை திறந்தாள் மூதாட்டி.

ஆனால் வாசலில் ஒரு சிறுவன் நின்றான்.  கறுப்பாக இருந்தாலும் அழகாகஇருந்தான். அவனை பார்த்தவுடன் அந்த மூதாட்டிக்கு பயம் நீங்கியது. “நீ யாரப்பா.எங்கிருந்து வருகிறாய்?“ என்று கேட்டாள்.

“அதெல்லாம் அப்புறம் சொல்கிறேனஅ.., எனக்கு பசியாக இருக்கிறது. உணவுதருவாயா?” என்று கேட்டான் அந்த சிறுவன்.

அவனை வீட்டுக்குள் அழைத்து,  “அப்பா.. நான் ஒரு ஏழை கிழவி. உனக்குருசியான சாப்பிட கொடுக்க என் வீட்டில் எதுவும் இல்லை. இந்த ஏழை பாட்டியால்இந்த அரிசி கஞ்சியைதான் தர முடிந்தது” என்று சொல்லி  அரிகி கஞ்சியை தந்தாள். அதை வாங்கி சாப்பிட்டான் சிறுவன்.

“அனஅபோடு நீ கொடுத்த அரிசி கஞ்சி அமுதத்துக்கு சமமானது. இந்த அரிசிகஞ்சிக்கு நான் உனக்கு ஏதேனும் பிரதி உபகாரம் செய்ய வேண்டும். என்ன உதவிவேண்டும் கேள்.” என்றான் சிறுவன்.

அந்த சிறுவன் பேசியதை கேட்டு சிரித்தாள் பாட்டி. மேலும்,  பாட்டி,  “அட சுட்டிபயலே. நீ என்ன பகவான் கிருஷ்ணனோ. உன்னால் எனக்கு என்ன உதவிசெய்துவிட முடியும்.?” என்ற பாட்டி, “இந்த ஊரில் முரன் என்ற அசுரன்இருக்கிறான். அவன் கண்ணில் நீ படாமல் இருந்தாலே போதும். நேரம்இருட்டிவிட்டது. இங்கேயே தூங்கிவிட்டு காலையில் பத்திரமாக வீடு போய் சேர்”என்றாள் .

சிறுவனோ, . “எங்கள் ஊரில் நான் பாம்பின் மேல் தூங்கி பழகியவன். வீட்டுக்குள்தரையில் படுத்தால் எனக்கு தூக்கம் வராது. திண்ணையில் படுத்துக்கொள்கிறேன்பாட்டி விடிந்ததும் புறப்படுகிறேன்.” என்று சொல்லி திண்ணையில் படுத்துக்கொண்டான்.

மறுநாள் பொழுது விடிந்த சமயம்…  ஏதோ குண்டு வெடிப்பது போல பலத்தசத்தம்  கேட்க… பாட்டியும்,  ஊர் மக்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியேவந்து பார்த்தார்கள்.  நடுதெருவில் அசுரன் முரன் இறந்து கிடந்தான்.  “யார் இந்தஅசுரனை கொன்றது?” என்று ஒருவரை மற்றவர்  கேட்டுக்கொண்டார்கள்.

பாட்டி, தன் வீட்டு திண்ணையை பார்த்தாள். அந்த சிறுவனை காணவில்லை.  நேற்றிரவு வந்தது கண்ணன்தான் என்பதை உணர்ந்தாள்.

“இந்த அசுரனின் தொல்லையில் இருந்து காப்பாற்ற தினமும் நாம் ஸ்ரீமந்நாராயணனிடம் வேண்டுவோமே. அந்த கண்ணனின் லீலைதான் இது” என்றாள்பாட்டி.

முரன் என்ற அசுரனை வதம் செய்தததால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு “முராரி”என்று பெயர் ஏற்பட்டது.

“ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்ற பாடலை மனமுருகி பாடுங்கள்..  எந்தஅசுர சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது. பகவான் கிருஷ்ணர், நம்மைஎப்போதும் காத்தருள்வார்!