
குழந்தைகளுக்கான சோப், பவுடர் ஆகியவை விற்பனை செய்வதில் முன்னணியில் இருப்பது ஜான்சன் அண்ட் ஜான்சர் நிறுவனம். இந்நிறுவனத்தில் பொருட்கள், இந்தியாவின் கிராமப் புறங்களிலும் பிரபலமாக உள்ளன.
“ஜான்சன் அண்ட் ஜான்சன்” என்றாலே மிருதுத்தன்மையும் குழந்தை முகமும் மனதில் தோன்றும்.
ஆனால், இன்த ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்களால் புற்று நோய் ஏற்படுகிறது என்ற அதிரவைக்கும் உண்மை இப்போது வெளிப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின், மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் ஃபாக்ஸ். இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடரை பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கர்ப்பப்பை புற்றுநோயினால் ஜாக்குலின் ஃபாக்ஸ் மரணமடைந்தார்.
இவரது குடும்பத்தினர், “ ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களைப் பயன்படுத்திய காரணத்தால் தான் ஜாக்குலினுக்கு புற்றுநோய் ஏற்பட்டது” என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்களை பயன்படுத்தியதால்தான் புற்று நோய் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே மரணமடைந்த ஜாக்குலின் குடும்பத்துக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 72 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். இது இந்திய மதிப்பின்படி ரூ.493.50 கோடி ஆகும்.
ஏற்கெனவே ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகள் பற்றி புகார்கள் வந்தன. இப்போது புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel