தமிழக வரலாற்றை தனது கண்ணோட்டத்தில் வித்தியாசமான கோணத்தில் உலகுக்கு அளித்த ஜப்பானை சேர்ந்த நொபோரு கரஷிமா காலமானார்.
சமூகம் எப்படி இயங்கியது, எப்படி மாறியது என்பது தெரியாமல் அரசியல் வரலாற்றை – ஆட்சி வரலாற்றை- புரிந்துகொள்ள முடியாது என்ற கொள்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டடவர் கரஷிமா.
தமிழகத்தின் மன்னர் ஆட்சிகளைப் பேரரசுகளின் ஆட்சிகளாகப் பார்த்து வரலாறு எழுதிய பழைய தலைமுறை வரலாற்று ஆய்வாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தமிழக வரலாற்றை நோக்கியவர் அவர்.
பண்டைய தமிழ்ச் சமூகத்தின் வாழ்முறையை அறிந்துகொள்ளும் செய்திச் சுரங்கமாகவே அவர் கல்வெட்டுகளை ஆராய்ந்தவர்.
.தமிழகத்தின் வணிக உறவுகள், கலாச்சார உறவுகள் தூரத்து நாடுகளிலும் நிலைபெற்றிருந்ததை உலகுக்கு எடுத்துக் கூறியவர். சீனாவில் தமிழ்க் கல்வெட்டு இருப்பதைக் கண்டு சொன்னவர். சோழர் மற்றும் விஜயநகர ஆட்சிக்காலத்தை விரிவாக ஆராய்ந்தவர்.