டெல்லி

ஜனாதிபதி திரவுபதி முர்மு ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள் அறிக்கையில்,

”ஈத் (ரம்ஜான் பண்டிகை) புனித ரமலான் மாதத்தின் நோன்பு மற்றும் பிரார்த்தனையின் முடிவை குறிக்கிறது. இந்த பண்டிகை சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் இரக்க உணர்வை வலுப்படுத்துகிறது.

இந்த பண்டிகை இணக்கமான, அமைதியான மற்றும் வளமான சமூகத்தை உருவாக்க நம்மை ஊக்குவிக்கிறது. இந்த பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும்.

மேலும் நேர்மறையான அணுகுமுறையுடன் முன்னேற நமக்கு பலத்தைத் தரட்டும். இந்த புனிதமான நாளில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.”

என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.