
லாகூர்:
உலகிலேயே முதலாவதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகம் முழுவதும் சோலார் சக்தி மூலம் இயங்குகிறது.
சீனாவின் உதவியுடன் 55 மில்லியன் டாலர் செலவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகம் முழுவதும் கடந்த செவ்வாய் கிழமை முதல் சோலார் சக்தி மூலம் இயங்குகிறது.
இதற்கான அறிவிப்பு கடந்த 2014ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. நட்பு ரீதியில் சீன அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சீனா பிரதமர் அறிவித்தார்.
சுதந்திரம் பெற்ற பிறகு நாடாளுமன்றம் தான் முதன் முதலாக சுய உற்பத்தி திறன் கொண்ட சோலார் பிளான்டை நிறுவியுள்ளது. 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 60 சதவீதம் நாடாளுமன்ற பயன்பாட்டுக்கும், இதர 20 சதவீதம் தேசிய பயன்பாட்டிற்கும் வழங்கப்படுகிறது.
உலகிலேயே முழு அளவில் சோலார் சக்தியில் இயங்கும் நாடாளுமன்றம் என்ற பெருமை பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. இஸ்ரேல் போன்ற ஒரு சில நாடாளுமன்றங்கள் பகுதி மட்டுமே சோலார் சக்தியில் இயங்குகிறது.
Patrikai.com official YouTube Channel