
சேலம:
சேலத்தில் இன்று காலை நிகழ்த்தப்பட்ட உலக சாதனை..!
சேலம் குளூணி பள்ளி மாணவிகள் 483 பேர் ஒரே சமயத்தில் மண்பானை மீது ஏறி நின்று கீழே இறங்காமல் முகபாவனைகளோடு,கை, கால்களை அசைத்து பரதம் ஆடி உலக சாதனை நிகழ்த்தினர்..!
இந்த உலக சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் குளூணி பள்ளி பரத ஆசிரியை மதிப்பிற்குரிய திருமதி லதா மாணிக்கம் அவர்கள்..!
உலகசாதனைகளை அங்கீகரிக்கும் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி,இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ட்ஸ் அமைப்பின் அதிகாரிகள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது..!
உலகிலேயே மிக அதிகமான நபர்கள் ஒரே சமயத்தில் பானை மீது நடனம் ஆடிய நிகழ்வு இது..!
சாதனை நிகழ்த்திய திருமதி லதா மாணிக்கம் மேடம், குளூணி பள்ளி மாணவிகள், பள்ளி தலைமையாசிரியர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள்..!
Patrikai.com official YouTube Channel