இந்திய குடியரசு கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான செகு தமிழரசன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் பரவியது. இது செய்தியாகவும் இணைய இதழ்களில் வெளியானது. (நமது பத்திரிகை டாட் காம் உள்பட.)
அக் கட்சி வட்டாரத்தில் பேசியபோது, “செ.கு. தமிழரசனின்மீதான நடவடிக்கைகள் தொடர்பாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி முடிவுக்கு பிறகே செ.கு. தமிழரசன் மீதான நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்கள்.
அதே நேரம், “செ.கு. தமிழரசன் மீது ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் பல கட்சித் தலைமைக்கு சென்றுள்ளது. அதை ஆராய்வதற்காக குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரது நீக்கம் உறுதி” என்றும் இந்திய குடியரசு கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.