
கோலிவுட், டோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக சுமார் பத்து வருடங்கள் கொடிகட்டி பறந்த ஸ்ரேயாவை ஞாபகம் இருக்கிறதா? பட்.. காலப்போக்கில் ஸ்ரேயா மறக்கப்பட்டார். ஏற்கெனவே ஜோடியாக நடித்த ஹீரோக்களிடம் வாய்ப்பு கேட்டு போனில் பேசினார், நேரடியாக சந்தித்தார், பார்ட்டி வைத்தார்.. ஊஹூம்.. பயனில்லை. விருது விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு “உள்ளேன் அய்யா..” என்று ஆஜர் கொடுத்து வருகிறார்.
இந்த புத்தாண்டிலிருந்தாவது பட வாய்ப்பை பெற வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். அதன் முதல்படியாக, தனது ட்விட்டர் கணக்கில் அதிரடியாக தனது செக்ஸியான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
“பட வாய்ப்பு இல்லை என்றாலும் ஜிம்முக்கு போய், கும்மென்றுதான் இருக்கிறேன்” என்று சொல்லாமல் சொல்வது போல இருக்கிறது அந்த படம்.
ஆனால் இதை செஃல்பி என்று அவர் சொல்வதுதான் புரியவில்லை. செல்போனில் தனது முகத்தைத்தான் ஸ்ரேயா படம் எடுக்கிறார்.. பிறகு எப்படி மொத்த உருவமும் படத்தில் வந்தது?
Patrikai.com official YouTube Channel