q

ன்னுடைய நண்பர் ஒருமுறை சொன்னது “நான் சென்னையில் இருக்கும்போது XYZ வங்கியில் கலெக்ஷன் டிபார்ட்மென்ட் மேனஜராக இருந்தேன். வராக்கடன்களை வசூலிக்க கலெக்ஷன் பசங்களை வீட்டுக்கு அனுப்பி பணம் வாங்கிட்டு வர சொல்லுவோம். போயஸ் கார்டனிலிருக்கும் ஒரு ‘சூப்பர்’ நடிகர் வாகனக்கடன் வாங்கியிருந்தார். 3 தவனை மட்டும்தான் கட்டியிருந்தார். அதற்கு அப்புறம் அவர்கிட்டேருந்து பணமே வரலை. கலெக்ஷன் பசங்க அவர் வீட்டுக்கு எப்போது போனாலும் அவரோட மேனேஜர்தான் இருப்பார். அவர் ‘மேடம் வரட்டும். கேட்டுட்டு தரேன். நானே கூப்புடுறேன், கிளம்புங்க!’ என சொல்லி அனுப்பிடுவார். அவர்ட்டேர்ந்து ஃபோனே வராது. ரெண்டு மூனு நாள் கழிச்சி திரும்பவும் கலெக்ஷன் பசங்க அங்க போவாங்க. நடிகரோட மனைவி எங்க பசங்களை கண்டுக்கவே மாட்டாங்க. ‘போப்பா போ! அப்புறமா வா!’ன்னு விரட்டுவாங்க.
திரும்ப அடுத்த நாள் போனா “என்னாப்பா தினமும் வர? வீட்டுக்கெல்லாம் வராத. நாளைக்கு ஸ்கூலுக்கு வா?!” என சொல்லுவாங்க.
மறுநாள் அவுங்க நடத்தும் ஸ்கூலுக்கு போனால் அவுங்களை பார்க்கவே முடியாது. நாள் முழுக்க பிசியாக இருப்பதுபோல சீன் போடுவாங்க. அப்பவும் அசராம மணிக்கணக்கில் உட்கார்ந்து அவங்களை போய் பார்த்தால் “எவ்ளோ தரனும்? சீக்கிரம் சொல்லு?” என அதட்டுவாங்க.
” 4 மாச ட்யூ 96,000 ரூபாய் வருது மேடம்!” என சொன்னதும்
உடனே அக்கவுன்டன்ட்டை கூப்பிட்டு ” இந்த தம்பிக்கு ஒரு 15,000 செக் போட்டுக்கொடுத்து அனுப்பிடு” என சொல்லிட்டு விருவிருன்னு எழுந்து போயிடுவாங்க.
கூப்பிட்டாலும் திரும்பி பார்க்க மாட்டாங்க.
இத்தனை தடவை அலைந்ததுக்கு இதாவது கிடைத்ததேன்னு திருப்திப்பட்டுக்குவோம்.
திரும்ப அடுத்த மாதம் இதே கதைதான்.
VVIP என்பதால் பேங்க் சார்பாக லீகல் ஆக்ஷனும் எடுக்க மாட்டாங்க.
இது எங்களுக்கு மட்டும் இல்லை. அவுங்க நிறைய வங்கிகள்ல லோன் வாங்கியிருக்காங்க. இதே வேலையைத்தான் எல்லா வங்கிக்கும் காட்டிட்டு இருக்காங்க. இப்ப எல்லா வங்கிகளும் உஷார் ஆகிட்டாங்க. புதுசா இவங்க லோன் கேட்டால் யாரும் கொடுப்பதில்லை.
கஷ்டப்படுபவன், பணம் இல்லாதவன் ஒரு மாத கடன் தவனையை ஒழுங்கா கட்டலைன்னாலும் அவனை தெருத்தெருவா துறத்தி வசூல் பண்ணும் எங்களால் இதுபோன்ற உயர் மேல் தட்டு வர்க்கத்திடம் ஒன்னும் செய்ய முடியாது என புலம்பிட்டிருந்தார்.
புலம்பினார் என சொல்றதைவிட ‘பீப்’ வார்த்தை போட்டு திட்டிட்டு இருந்தார்.
எல்லா ஊரிலுமே விஜய் மல்லையாக்கள் உண்டு. பெயர்தான் வேறவேற.

நம்பிக்கை ராஜ் (முகநூல் பதிவு)