தென் சீனக் கடல் பகுதியில்,, சீனா வான் வழி தற்காப்பு மண்டலம் அமைப்பதை அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்று அமெரிக்கா சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெரி மங்கோலியாவுக்கு குறுகியகால பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “தென் சீனக் கடலின் பெரும் பகுதியை தன்னுடையது என சீனா உரிமை கோரி வருகிறது. இதை அமெரிக்கா சுட்டிக்காட்டியும், “பிரச்சினைகளை கண்டு பயமில்லை” என்று கூறி அமெரிக்காவின் விமர்சனத்தை நிராகரித்துள்ளது சீனா.
சீனாவின் நடவடிக்கை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும். இதை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது” என்று ஜான்கெரி தெரிவித்தார்.
சாச்சைக்குரிய கடல் எல்லை பகுதியை பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்பட பிற நாடுகளால் உரிமை கொண்டாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.