china one child policy
சீனாவில் நாம் இருவர்.. நமக்கு ஒருவர்

பெய்ஜிங்:
சீனாவில் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தை மேலும் 30 ஆண்டுக்கு நீட்டிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதால் வயதானவர்கள் செய்யும் பணிக்கு உதவிபுரிய ஆட்கள் இல்லாமல் குறைந்துவிட்டது என்ற கருத்தை சீன அரசின் மூத்த அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.
‘‘ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற நீண்ட நாள் கட்டுப்பாடு விலக்கப்படும்’’ என சீன கம்யூனிஸ்ட் அரசு கடந்தாண்டு அறிவித்திருந்தது. அனைவரையும் இரு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என கூறியிருந்தது.
ஆனால், இந்த காலம் தாழ்ந்த முடிவு மிக ஆபத்தான ஏற்றதாழ்வற்ற மக்கள் தொகையை உருவாக்கிவிடும். மேலும், பல தம்பதிகள் தற்போது மேலும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள தயாரான மன நிலையில் இல்லை என்று வாதங்கள் எழுந்தது.
2050ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை 1.45 பில்லியனாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு ஒரு 60 வயதை கடந்த முதியவர் இருப்பார். அவர்களுக்கு மிக குறைந்த அளவிலேயே உதவக் கூடிய இளைஞர் சமுதாயம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அந்நாட்டின் தேசிய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப கட்டுப்பாடு திட்ட துணை அமைச்சர் வாங் பெய் கூறுகையில்,‘‘ குடும்ப கட்டுப்பாடு திட்டம் நீண்ட நாட்களுக்க நீடிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். நீண்ட நாள் என்பது 20 அல்லது 30 ஆண்டுகளாகும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மக்கள் தொகையில் மாற்றம், மற்றும் சமூக பொருளாதாரம் மாற்றம் அடைந்த பிறகு புதிய மக்கள் தொகை கொள்கை கொண்டு வரப்படும். எத்தனை காலம் குடும்ப கட்டுப்பாடு நீடிக்க வேண்டும் என கூற முடியாது. வயதான மக்கள் தொகை பிரச்னை என்பது உலகளவில் உள்ளது. இது தவிர்க்க முடியாத விஷயம். சீனாவில் தொழிலாளர் பிரச்னை என்பது தொழிலாளர்களின் எண்ணிக்கையில் இல்லை. தொழிலாளர்களின் தரத்தை உயர்த்துவது எப்படி என்பது தான் பிரச்னை’’ என்றார்.
மேலும் இரண்டு குழந்தை திட்டத்தை அமல்படுத்தினால் சீனாவில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 2050ம் ஆண்டில் 30 மில்லியனாக இருக்கும். அதே சமயம் வயதான மக்கள் தொகை 2 சதவீதம் மட்டுமே குறைந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு குழந்தை திட்டம் 1970ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இதனால் தொழிலாளர் எண்ணிக்கையை குறைத்துவிட்டதாகவும் கருத்து நிலவுகிறது.